தண்ணீர்
மீன் தொட்டியில் மீன்களை விடுவதற்கு முன் அதனை நன்றாக சுத்தம் செய்து, மீன்களின் தன்மைக்கு ஏற்ற தண்ணீரை தொட்டியில் நிரப்ப வேண்டும்.
உதாரணமாக, கடல் மீன் வளர்க்க விரும்புகிறோம் எனில், கடல் நீரின் அளவிற்கு உப்புத்தன்மை வாய்ந்த தண்ணீரை நிரப்ப வேண்டும். அதுவே நன்னீரில் வாழும் மீன்களாக இருந்தால், அவை ஜீவிக்க தண்ணீரின் pH அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு குழாய் நீரா, நிலத்தடி நீரா, மினரல் நீரா எதை நிரப்ப வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
உப்புநீராக இருந்தால் சீக்கிரமாக தொட்டியை சுற்றி உப்புப் படிந்து விடும். அதனால் தேவையென்றால் மட்டுமே அதைப் பயன்படுத்தவும். இல்லையெனில் தவிர்த்துவிட்டு, க்ளோரின் இல்லாத கேன் வாட்டர், சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீர் (Purified water) பயன்படுத்தலாம்.